Wednesday, October 5, 2011

சோம்பேறி!

பிளாக் தொடங்கினேன் எழுதுவதற்காக... சோம்பேறியாய் இருந்து விட்டேன். என் நண்பனின் குடிபோதை காமெடிகளை டைப் செய்திருந்தேன். அதை முதல் போதையாக பதிவு செய்கிறேன். இதில் மாற்றுக் கருத்து இருக்கும் நண்பர்களிடம் முதலிலேயே மன்னிப்பு கோருகிறேன்.  எழுத்து பிழை இருந்தாலும் மன்னிக்கவும்:

ஒவ்வொருவடைய வாழ்க்கையில் தினமும் காமெடி சம்பவம் பல நடக்கத்தான்  செய்யும். ஆனால் அதை நினைத்து சிரிக்கும்போது மன சந்தோஷப்படும். அந்த சம்பவங்களை அசை போடும்போது, நம்முடைய நிலையை நினைத்து  சிரிப்பும், வெட்கமும் வரும். இப்படி ஒரு கதாபாத்திரம்தான் டக்ளஸ்.  உண்மை பெயர் வேறு என்றாலும், பாசத்தாலும், நெருங்கிய நட்பாலும் அவரை அப்படித்தான் நான் கூப்பிடுவேன்.
இவனது காமெடிகளை ரோட்டில் போகும்போது நினைத்து பல நாள் சிரித்து, எதிரே வருபவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சென்ற சம்பவங்களும் உண்டு.
டக்ளஸ் காமெடிகள் எல்லாம் டாஸ்மாக் சரக்கை மையமாக வைத்தே நடக்கும்.
அந்த அளவுக்கு ஒரு ரசிக்கும் படியான  காமெடி கேரக்டர் டக்ளஸ். உங்களையும் சிரிக்க வைக்க... அவனது அட்டகாசங்களை எழுதுகிறேன்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை...
டக்ளஸ் விளையாட்டு துறை நிருபர். இவனுக்கு துõங்கும் நேரம் என்பது அதிகாலை 3 மணி தான். அதுவும் இவன் வைத்திருந்த டூவிலர் , சத்தியத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட கூடியது. அவனை தவிர எந்த கொம்பனாலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது. பிரேக் என்றால் என்ன என்று?  கேட்கும் வண்டி. வண்டிக்கு சைடில் பெட்டி இருக்கும். ஆனால் அது ரோட்டில் இருந்து 10 இன்ச் உயரத்தில்தான் இருக்கும். அந்த அளவு பெட்டியும் மப்பில் மிதந்து வரும். மொத்ததில் 10 அடி முன்னே போனால், 15 அடி பின்னே வரும் அற்புதமான ரிஷப வாகனம்.
ஒருநாள், வயிறு நிறை டாஸ்மாக் சரக்குடன் இரவு 1 மணிக்கு பிரஸ் கிளப்பில் இருந்து அந்த வாகனத்தில் புறப்பட்டான்.  சரக்கு உள்ளே போனால் அவனுக்கு ஸ்ப்பீக்கர் அவுட்டாகி விடும். ஒரு முறைக்கு பல முறை சொன்னால்தான் அவனுக்கு புரியும்.
அந்த நடு இரவில், டூவிலருக்கு பெட்ரோல் போட  மவுண்ட் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் சென்றான். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு, வண்டியை கிளப்பினான்.
வண்டி ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.  ஆக்சிலேட்டரை திருக்கியதில் மவுண்ட் ரோடே அலறியது. அவன் கண்டுக் கொள்ள வில்லை. ஆக்சிலேட்டரை திருக்கியபடி, காலை கீழே மிதித்து தள்ளியபடி வண்டியை கிளப்பினான். வண்டி நத்தை வேகத்தில் நகர்ந்து.
ரோட்டோரம் இருந்தவர்கள் எல்லாரும் அலறினர். மப்பில்,  அடைக்கப்பட்டிருந்த  அவனது ஸ்பீக்கருக்கு (காதுக்கு) கேட்கவே இல்லை. சொருகிய கண்ணால் பார்த்தபோது, பலர் அவனை நோக்கி கை நீட்டி சத்தம் போடுவது மட்டும் தெரிந்து. காதுக்கு அருகே, ‘யோவ்... யோவ்.. வண்டியை நிறுத்துயா... டேய் வண்டியை நிறுத்துயா...’ என்ற வார்த்தை கேட்டாலும், திருக்கிய ஆக்சிலேட்டரை டக்ளஸ்  விடவில்லை. பொதுமக்கள் எல்லாரும் அலறினர்.
பெட்ரோல் பங்கில் இருந்து 100 அடி துõரம் உள்ள டிராபிக் சிக்னல் வரை வந்து விட்டான். மக்கள் எல்லாம் அலறி அடித்து முன்னும் பின்னும் வருவதை அரை கண் பார்வையில் பார்த்த, ‘என்ன... என்ன...?’ ஆவேசமாக கேள்வி எழுப்பினான். பின்னால் இருந்து மீண்டும் யோவ்... டேய்.... சவுண்ட் கேட்டது.
திரும்பி பார்த்தால், இவன் டூவிலருடன் மற்றொரு டூவிலர் சிக்கி கொண்டிருந்தது. அதில் ஒருவன் மரண பயத்தில், யோவ் யோவ் என்று ஏதோ அலறினான். டக்ளசுக்கு போதை கொஞ்சம் குறைந்தது. ‘யோவ்... நீ ஏன்டா என் கூட வார...?’ என்று டக்ளஸ் கோபத்தில் கேட்டான்.
அதற்கு, ‘டேய் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட நின்னுக்கிட்டு இருந்தவனை இழுத்துட்டு வந்துக்கிட்டு எங்கிட்ட கேள்வி கேட்கிறீயா...? என்று அந்த டூவிலர் ஆசாமி எகிறினார்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட டக்ளஸ் வண்டிக்கு அருகே டிவிஎஸ் எக்ஸ்செல் பைக்கில் அப்பாவி ஆசாமி நின்றார். டக்ளஸ் பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை நகர்த்தும் அதேநேரத்தில் அவரசத்தில் எக்ஸ்செல் வண்டியை முன்னே கொண்டு வந்துள்ளார் அந்த ஆசாமி. அப்போது டக்ளஸ் வண்டியில் இருந்த பெட்டியில், அவரது மொபட் பம்பர் சிக்கிக் கொண்டது. இதை கவனிக்காமல், ஆக்சிலேட்டரை திருக்கி திருக்கி 100 அடி துõரத்துக்கு அந்த ஆசாமியை டக்ளஸ் இழுத்து வந்து விட்டான். இதான் பிரச்னை. போதையிலும் அழகாக சிரிக்கும் டக்ளஸ், தன் புன்னகை சிரிப்பில் அந்த ஆசாமியை அனுப்பி வைத்து, வீடு போய் சேர்ந்தான்.

1 comment:

  1. சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் தேங்கிவிட்டது! நம் எல்லோருக்கு இவரை போன்ற ஒரு நபரை தெரிந்திருக்கும்!

    ReplyDelete