டாவின்சி கோட் என்ற படத்தை அண்மையில் பார்த்தேன். இயேசுவுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டா? எத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளனர்? ஆதாரங்களை வாய்மொழியாக கூறி, விருந்து உண்ணும் போட்டோவுக்கும் கதையை சொல்லி ஆஹா...! என்று இயக்குனரை மனதுக்குள் பாராட்டினேன்.
அப்போது என் வகுப்பு தோழன் டேவிட் அதிசயம் பற்றி நினைவு வந்தது. மாணவனாக இருந்தபோது, நானும் அவனும் செய்த சேட்டைகள் கொஞ்சமல்ல. எங்களால், பல நாட்கள் இரவு துõக்கத்தை ஆசிரியர்கள் இழந்தனர். நானும், அவனும் ரொம்ப நல்லவர்கள்...?
ஆனால் கால போக்கில், அவன் ஆன்மீகவாதியாகி விட்டான். பல முறை அவனை நினைத்து ஆச்சரியப்படுவேன். கிறிஸ்துவ மத போதகராகி, இப்போது அவனது போதனைகளை பல ஆயிரம் மக்கள் தினமும் கேட்கின்றனர். எப்படி இருந்த அவன்... இப்படி ஆயிட்டானே...? என்று நினைத்தது உண்டு.
அவனிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினேன். நீண்ட உரையாடல்... டாவின்சி கோட் படத்தை பற்றி ஆரம்பித்த பேச்சு, யூதாசை சென்றடைந்தது. யூதாசைப் பற்றி நகை சுவையான கதை சொன்னான்.
யூதாசுக்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால்தான் இயேசுவிடம் சிஷ்யனாக சேர்ந்தான். உலகத்தின் அதிபதி இயேசு, யூதர்களுக்கு ராஜாவாக இயேசு பிறந்துள்ளார், யூத ராஜ சிங்கம் என்றொல்லாம் இயேசுவை பற்றி கூறினர். இதை கேள்விப்பட்டுத்தான் இயேசுவை வந்தடைந்தான்.
ஒரு நாள் இந்த உலகத்துக்கு ராஜா பதவிக்கு இயேசு வருவார். அப்போது அதிகாரம் அதிகம் உள்ள அமைச்சர் பதவியை தட்டிப்பறித்து விட வேண்டும் என்று யூதாஸ் நினைத்தான். அதுதான் அவனது கனவு. லட்சியமாக இருந்தது. யூதாசின் ஆசைகளை இயேசுவும் நன்கு அறிவார்.
ஆனால் யூதாஸ் நினைப்பது போல் நாட்டை பிடிக்காமல், மக்களின் மனதை இயேசு கொள்ளையடித்தார். வன்முறையை கைவிடச் சொன்னார். ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று போதனை செய்தார்.
இது யூதாசால் சகிக்க முடியவில்லை. போர் புரிவார், அரசனை கொல்வார். நாட்டை கொள்வார் என்றெல்லாம் யூதாஸ் கண்ட கனவில் மண் விழுந்தது. ‘இந்த ஆளுடன் சேர்ந்தால், முக்கிய பொறுப்புக்கு வரலாம் என்று நினைத்தால், இவர் என்னடா... திருப்பி அடிக்காதே! அடி வாங்கு என்கிறாரே...? இவர் எப்படி ராஜாவாகுவார்? என்று யூதாஸ் நினைத்தான், கோபம் அடைந்தான்.
இந்த கோபத்துடன் இயேசு பின்னால் யூதாஸ் சென்றார். நீண்ட நடை பயணத்தினாலும், பசியினாலும் சீடர்கள் எல்லாரும் சோர்வாகி விட்டனர். இதை கவனித்த இயேசு, ‘சீடர்களே எல்லாரும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். எல்லா சீடர்களும் ஒரு சராசரி கல்லை துõக்கினர். கோபத்தில் இருந்த யூதாஸ் மட்டும், ‘இவருக்கு வேறு வேலை இல்லை’ என்று இயேசுவை திட்டிக் கொண்டே ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தார்.
‘உங்களது கையில் இருக்கும் கற்கள் எல்லாம் அப்பம் ஆகட்டும்’ என்றார் இயேசு ஆணையிட்டார். மற்ற சீடர்கள் எல்லாருக்கும் போதுமான அளவு அப்பம் இருந்தது. சின்ன கல்லை வைத்திருந்த யூதாசுக்கு சின்ன அப்பம்தான் கிடைத்தது. ஏற்கனவே இருந்த கோபம், பசியால் அதிகரித்தது.
அப்பம் போச்சே...! என்ற கோபத்தில், சின்ன துண்டு அப்பத்தை வாயில் போட்டுக் ö காண்டு இயேசு பின்னால் நடக்கத் தொடங்கினான். சிறிது துõரம் சென்றதும், ‘எல்லாரும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு கூறினார்.
ஆஹா... சின்ன கல்லை எடுத்தோம், சின்ன அப்பம் கிடைத்தது. இந்த முறை பெரிய கல்லாக எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு, இரண்டு கைகளால் பறாங்கலை யூதாஸ் துõக்கிக் கொண்டான். மற்ற சீடர்கள் எல்லாரும் சின்ன கல்லை துõக்கினர்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கலை வீசுங்கள். அது எவ்வளவு துõரம் போகிறதோ, அந்த நிலங்கள் எல்லாம் உ<ங்களுக்கு சொந்தம்’ என்று இயேசு ஆணையிட்டார். சீடர்கள் எல்லாரும் கற்களை வீசி, பல ஏக்கர் நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். இரண்டு கைகளில் தாங்கி பிடித்துக் கொண்டிருந்த பெரிய கல்லை, துõக்கி வீச முடியாததால், 3 அடி நிலம் மட்டுமே யூதாசுக்கு கிடைத்தது. அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
நடு பகல், சூரிய கதிர்கள் சுட்டெரித்தது. பாலைவனம் போன்ற இடத்தை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘எல்லாரும் 2 கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு. சின்ன கல்லை எடுத்தோம் அப்பம் போச்சு, பெரிய கல்லை எடுத்தோம் நிலம் போச்சு, இனி விடக்கூடாது. ஒரு சின்ன கல், ஒரு பெரிய கல் என்று 2 கற்களை எடுத்துக் கொள்வோம் என்று ஆத்திரத்துடன், யூதாஸ் முடிவு செய்தான். அவ்வாறே கற்களையும் எடுத்துக் கொண்டான்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கள் காலணியாக மாறட்டும்’ என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களுக்கு ஒன்று போல் 2 செருப்புகள் கிடைத்தது. யூதாசுக்கு பெரியது, சிறியது என்று 2 செருப்புக்கள் கிடைத்தது. எல்லா சீடர்களும் செருப்பை போட்டுக் ö காண்டு அந்த பாலைவனத்தை எளிதாக கடந்தனர். ஆனால் ஒரு பெரிய செருப்பையும், ஒரு சிறிய செருப்பையும் போட்டுக் கொண்டு யூதாஸ் நடக்கவே படாது பாடு பட்டார். கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இவரை நம்பி வந்தது தப்பா போச்சே! இவருடன் இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தான். கோபத்துடன் இருந்த சூழ்நிலையில்தான், யூத அறிஞர்களின் ஆசை வார்த்தைக்கும், 30 வெள்ளிக்காசுக்கும் ஆசைப்பட்டு இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான். இயேசு கொடுமை செய்யப்படுவதை கண்ட போது, யூதாஸ் மன வேதனை அடைந்தான். பைத்தியமானான். ஊரை விட்டு ஓடி, துõக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இப்படி கதை சொல்லிய டேவிட், ஏதோ வேலை இருக்கிறது என்று கூறி லைனை கட் செய்து விட்டான்.
அவன் சொன்ன கதையில் மனம் சென்றது. நம் வாழ்க்கையிலும், இதுபோன்று கோபத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுத்து, அது பெரிய தப்பாக மாறியிருக்கும். அதை நினைத்துக் கொண்டே போன என் மனது, கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும்தான் பாதிக்கும்.
அதே போப முடிவை அரசியல்வாதிகள் எடுத்தால்...?
என் நினைவுக்கு வந்தது தமிழக மேலவை. ‘கலர் பொடி முகத்தில் பூசி மக்களை குதுõகலப்படுத்தும் நடிகை வைஜெயந்தி மாலா என்பவரை மேலவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற கோபத்தில், தமிழ்நாட்டில் இருந்த மேலவையை துõக்கி வீசினார் எம்.ஜி.ஆர். மா.பொ.சி., பல முறை கெஞ்சியும், எம்.ஜி.ஆர். மனம் அதை ஏற்கவில்லை.
இதுநாள் வரை மேலவையை தமிழகத்தில் உருவாக்க முடியவில்லையே...? மேலவை இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் விரும்பபடி தங்கள் மனதுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்க முடியாது. இரு அவையிலும் விவாதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் மேலவை ஒன்று இல்லாததால், தமிழக சட்டசபையின் மரபு என்ன என்று தெரியாமல் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆர். கோபத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவிதாங்கூர் போராட்டத்தின்போது, பீர்மேட்டையும், தேவிகுளத்தையும் தமிழகத்துடன் எப்படியாவது இணைத்து விட வேண்டும். அது தமிழர்கள் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம். இந்த 2 ஊரையும் தமிழகத்துடன் சேர்த்து விட்டால், முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்குள் வந்து விடும்’ என்று நினைத்து காமராஜரிடம் பலர் கூறினர்.
மேடாவது? குளமாவது ? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கு? போங்கள் என்று காமராஜர் விரட்டி அடித்து விட்டார். இவர் அன்று கோபப்படாமல் சிந்தித்து செயல்பட்டு இருந்தால், முல்லை பெரியாறு என்ற போராட்டம் தேவையில்லாமல் போய் இருக்கும். தமிழகத்திலும், கேரளத்திலும் பதட்டம் தேவையில்லை.
காமராஜர் அந்த ஒரு நொடி பொழுதாவது இந்தியனாக இல்லாமல் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோபப்படாமல் இருந்திருக்கலாம். இதுபோல் ஒவ்வொரு உதாரணங்களும், ஒவ்வொருவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கோபத்துடன் எடுக்கப்படுகின்ற முடிவு தவறாக முடியும் என்பதற்காக சொன்னேன். மற்றப்படி காமராஜர், எம்.ஜி.ஆர். மீது கோபம், பகை என்று எதுவும் கிடையாது. இந்த தலைவர்கள் தமிழகத்துக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அவர்களது கோபத்தை மட்டுமே குறை சொல்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment