புரட்சி செய்வீர் முதல்வரே?
என்ன புரட்சி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் பெயருக்கு முன்பு புரட்சி தலைவி என்று போட்டுள்ளார் நமது முதல்வர். ஆனால் உண்மையில், அவர் புரட்சி தலைவி என்ற பெயரை எல்லா தரப்பு மக்களிடமிருந்து பெறவேண்டும் என்றால், அவர் முதலில் அண்ணா நுõற்றாண்டு நுõலக கட்டடத்தை இடிக்க வேண்டும்.
அப்படி இடிக்கும் பட்சத்தில், தீக்குளிப்பேன் என்கிறார் தாத்தா. (இல்லையென்றால் அவர் இறக்கவே மாட்டார்) தாத்தாவை வெடிப்போட்டு வழியனுப்ப தயாராக இருக்கும் எங்களை போன்ற பேரன்களின் ஆசைக்காவது, ஒரே ஒருமுறை நுõலக கட்டடத்தை முதல்வர் இடிக்கவேண்டும். இதன் மூலம் புரட்சிதலைவி என்ற பட்டம் சரியானதுதான் என்று அப்பாவி தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
2009ம் ஆண்டு கொடூரமாக கொத்துக் கொத்தா தமிழினம் இலங்கையில் பாஸ்பரஸ் குண்டுக்கு பலியான போது, முதல்வராக இருந்தபோது என்ன செய்தார். இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமையை தாங்க முடியாமல், வீரத்தமிழன் முத்துக்குமார் தீக்குளித்தானே? அப்போது என்ன செய்தார். போராட்டத்தை அடக்க போலீசாரை ஏவி விட்ட கேவலமானவர்தானே?
தமிழகத்தை ஒன்று திரட்டி போராட்டத்தில் குவித்தாரா? மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாரா? தான் கேட்ட அமைச்சர் பதவி பேரனுக்கு கிடைக்கவில்லை என்றதும், 2004ம் ஆண்டு மத்திய அரசை மிரட்டினாரே? துடித்துடித்தாரே? அந்த துடிப்பு, போராட்டம், மிரட்டல் ஆகியவற்றில் ஒரு சதவீதம் காட்டியிருந்தால்கூட, இலங்கை தமிழர்களின் சாவு எண்ணிக்கை குறைந்து இருக்குமே?
1980ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆரின் தம்பியாக பிரபாகரன் உலா வந்தார், அவரை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை என்ற வேதனை பல காலமாக மனதில்வைத்தே, புலிகளை வேரோடு அறுத்து எறிய காரணமாக இருந்தாரே?
பிரபாகரனை ஒரு தமிழனாக பார்க்காமல், எதிரியாக பார்த்து, இலங்கை கொடுமைகளை ரசித்து பார்த்தாரே? கடற்கரையில் 3 மணிநேரம், உண்ணாவிரதம் என்ற பெயரில் ஏர்கூலர், சாமினா பந்தல் உள்ளிட்டவைகளுக்கு விளம்பரப்படுத்துவது போல், காலுக்கும் தலைக்கும் ஏர்கூலர்களை வைத்து உண்ணாவிரதம் இருந்தாரே? நமக்கு மனைவி ஒன்று, துணைவி ஒன்று, வேறு எவனுக்கும் இது கிடையாது. எல்லாரும் வயிறு எரியட்டும் என்ற உள்நோக்கத்துடன், தலைக்கடியில் ஒரு மனைவி, காலுக்கடியில் ஒரு துணைவியை வைத்து உண்ணாவிரதம் நாடகம் நடத்தினாரே?
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் ஆதரவு போராட்டம் நடந்து விடக்கூடாது என்று மத்தியஅரசுக்கு கூஜா துõக்கிக் கொண்டு, போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் சிறைக்குள் துõக்கிபோட்டாரே?
மதிப்புக்குரிய பேராசிரியர் அன்பழகன் மூலம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் பேச வைத்து எச்சரிக்கை செய்தாரே? கொத்துக் கொத்தாக பெண் புலிகள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்ததை கண்டும் மனம் உருகாமல், வேடிக்கை பார்த்தாரே?
தமிழகமே கொதித்துப் போய்கிடந்தபோது, 2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் காலில் கிடந்த கூட்டணி அமைத்தாரே? அதுவும், சாதி தலைவனாக உலா வந்த என் சகோதரன் திருமாவளவன், இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசை அழித்தே தீருவேன் என்று கூக்குரல் எழுப்பினார். அன்றில் இருந்து தமிழனத்தின் தலைவனாக மாறினான். அந்த அன்புச் சகோதரனையும் அரசியல் சித்து வேலை செய்து, காங்கிரஸ் காலில் விழவைத்தாரே? தீவு திடலில் நடந்த கூட்டத்தில் எல்லா தலைவர்களின் பெயர்களை தவறாமல் சொன்ன சோனியா, திருமா பெயரை மட்டும் சொல்லாமல், அவமானப்படுத்தினாரே? அதை கண்டிக்காமல் மவுனம் காத்தாரே?
தமிழக பெண்களின் கற்பை தரம் தாழ்த்தி பேசிய குஷ்பு, ஒரு நிகழ்ச்சியில் திருமாவை அசிங்கப்படுத்தினாரே? அதே குஷ்புவை இப்போது வாரிசு போல் உடன் அழைத்துக் கொண்டு திரியும் இந்த வெக்கங்கெட்ட தலைவர் இருந்து என்ன பயன். திருமாவுக்கு ஏற்பட்ட அவமானம்தான் ஒட்டுமொத்த தமிழனுக்கும் ஏற்படும்.
அதுவும் அவரே தீக்குளித்து மடிய தயாராக இருக்கும்போது, இந்த வாய்ப்பை முதல்வர் விட்டு விடக்கூடாது.
அண்ணா நுõற்றாண்டு நுõலகத்தை இடம் மாற்றம் செய்வதில் எந்த தமிழனுக்கும் உடன்பாடில்லை. அது அங்குதான் இருக்கவேண்டும். உலக தரம்வாய்ந்த நுõலகம் தமிழனுக்கு பயன்பட வேண்டும். அந்த கட்டடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. நுõலகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கூட, தீக்குளிப்பேன் என்ற வாத்தையை கேட்ட பின்னர், உள்ளம் மகிழ்ந்து, கட்டடத்தை இடிக்க சம்மதம் என்று கூறுகின்றனர்.
அதனால், ஒரே ஒருமுறை நுõலகத்தை இடித்து புரட்சி செய்யுங்கள் முதல்வரே ?
கோடான கோடி தமிழர்கள் உங்களுக்கு விஷ்வாசமாகவும், நன்றிக்கடனுடனும் இருப்பார்கள்?
No comments:
Post a Comment