Monday, November 7, 2011

ஆரிய-திராவிடம் போர்...? இனங்களை பிரித்து வைத்த பெரியார்




ஜால்ராயுகம், கைப்புள்ள ஸ்டாலின் என்ற புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு அண்மையில் சென்று இருந்தேன். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் பேசியதை பலரும் ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘நம்மை பிரிக்க வெள்ளையனும், கொள்ளையனும்  வரவில்லை. பிரிவுக்கு நாம்தான் காரணம். 11வயதில் பெரியார் கொள்கையை ஏற்றேன். பிராமணர்களை போல வேதங்களை படித்தேன். சிகரெட், பிராந்தி பக்கம் போக மாட்டேன்.  நம் பயலுக முன்னேற வேண்டும் என்று  நினைத்து, சென்னைக்கு 18 பேரை கூட்டிட்டு வந்தேன். என்னை கொன்னே போட்டானுங்க.
எனக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தது கே. பாலசந்தர். தட்டிக் கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தது கமலஹாசன். இந்த 2 பேரும் எந்த சமுதாயத்தை சேர்ந்தவங்கன்னு சொல்லத் தேவையில்லை.
டாஸ்மாக் கடையில சிவத்த பயலுக யாராவது நிக்கிறாங்களான்னு பார்த்தால், எல்லாமே நம்ம பயலுகதான். ஒரு பிராமணன் இல்லை.
‘வீடு கட்டினால், பிராமணனுக்கு வாடகைக்கு கொடு. அவன்தான் சரியாக வாடகை கொடுப்பான்’ என்று பெரியார் கூறுவார். அதன்படி 33 வருஷத்துக்கு முன்னால, தெலுங்கு பிராமணருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தேன். இதுவரை சரியாக வாடகை வந்துக்கிட்டு இருக்கு.  ஒரு பிரச்னை இல்லை. நம்ம பயலுக்கு கொடுத்திருந்தால், வாடகையும் தந்திருக்க மாட்டான், வீட்டையும்காலி பண்ணியிருக்க மாட்டான். கேசை போட்டு, கோர்ட்டுக்கு என்னை அலைய விட்டிருப்பான்.
இதுவரை 10 புத்தகம் எழுதியிருக்கிறேன். என் சாதிக்காரன் ஒருத்தன் கூட பாராட்டல. எல்லாம் அவாள்தான் பாராட்டினால்.
‘நன்னா எழுதியிருக்கேள். பிச்சுட்டேல் போங்க. சிவாஜியை மிஞ்சிட்டேல்’ என்று பாராட்டியது எல்லாம் அவாள்தான்’ என்று மூச்சு விடாமல் நடிகர் ராஜேஸ் பேசி முடித்தார்.
பேச்சின் கடைசியில், ‘ஒரு வருத்தமான விஷயத்தை சொல்றேன். தலித்துக்கள்தான் அம்மா, அப்பாவை, மனைவி, பிள்ளைகளை எல்லாம் கவனிக்காமல் ரோட்டில் விடுகின்றனர். வருத்தமாக இருக்கிறது’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய  ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், ‘தேர்தல் பிரசாரத்தில் தனித் தொகுதிகளை எல்லாம் நீக்கவேண்டும், எல்லாமே பொது தொகுதியாக்க வேண்டும். நான் சாதியை பார்க்க மாட்டேன். சாதியை ஒழிக்க வேண்டும். சாதியை அரசு வளர்க்கிறது என்றெல்லாம் விஜயகாந்த் பேசுகிறார்.  அப்புறம் எதற்கு தன்னுடைய சாதியை தேடிப்பிடித்து, அதில்  உட்பிரிவில் உள்ள பிரேமலதா என்ற பெண்ணை  திருமணம் செய்தார்? சாதியை பார்க்கவில்லை என்றால் விஜயகாந்த் வேறு சாதி பெண்ணை கை பிடித்து இருக்கலாமே? விஜயகாந்த் என்பவர் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய தீய சக்தி’ என்றார். இதை கேட்டதும்  அரங்கத்தில் கர ஒலி விண்ணை தொட்டது.
இந்த 2 பேருடைய பேச்சையும் கவனிக்கனும். ஒன்று விஜயகாந்தை தாக்கியது. ஆமாம், ஏர்பார்ட்க்காரர் சொன்னதில்லை என்ன தப்பு இருக்கிறது.
அதேநேரம் சாதியை ஒழிக்கனும் என்று விஜயகாந்த் சொனனதிலும் தப்பில்லை. இது அரசியல் ரீதியான அட்டாக். ஓ.கே., ரெம்ப சிந்திக்க வேண்டாம் இந்த பேச்சை.
நடிகர் ராஜேஸ் பேச்சைத்தான் நன்றாக கவனிக்கனும். பிராமணனுக்கு வீட்டை கொடுன்னு பெரியார் சொன்னதாக பேசியுள்ளார்.
எல்லா மாநிலத்திலும் உள்ள பிராமணர்கள், “நான் தெலுங்கன், நான் மலையாளி, நான் கன்னடம் என்று தைரியமாக சொல்றான். ஆனால் தமிழகத்தில் உள்ள பிராமணர் மட்டும்தான் நான் இந்தியன் என்கிறான்.
இதற்கு என்ன காரணம், “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டு பாப்பானை அடி’ என்று நம்மை துõண்டி விட்டு இரட்டை நாடகம் எதற்கு போட வேண்டும்.
இன்னும் நுõறு ஆண்டுகள் ஆனாலும், பிராமணர்கள் தமிழர்களாக மாற மாட்டார்கள்.  தமிழன் எல்லாம் இந்தியன் என்று சொல்லும் போதுதான், நாங்கள் தமிழர்கள் என்று பிராமணர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் பிரிவினையை உருவாக்கி விட்டாரே?
பகுத்தறிவை வளர்த்தால், சாதி ஆதிக்க சக்தியை ஒழித்தார் என்று என்னென்னமோ பெரியாரை பற்றி புகழ்ந்து பேசலாம்.  தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னபோது, அவர் படம் போட்ட போஸ்டரில் கூட நம்ம மக்கள் மாட்டு சானத்தை  பூசவில்லையே? திராவிட கொள்ளையை பெரும்பான்மையான தமிழன் ஏற்றதால், இந்த பிரச்னை. திராவிடன், ஆரியன் என்ற போரை தொடங்கி வைத்தார் பெரியார். அந்த போரில் பிராமணனை வீழ்த்தினாரா?  போரை மட்டும்தானே தொடங்கி வைத்தார்.
அவருக்கு பின்னர் வந்தவர்களாவது அந்த போரை வழி நடத்திச் சென்றனரா?
தி.க. பிரைவேட் லிமிட்டேட் என்று பெயர் பலகை மட்டும் வைக்க வில்லை. மற்றப்படி அந்த இயக்கம் ஒரு தனியார் நிறுவனம் போலத்தானே செயல்படுகிறது?
சிந்திக்கத் தெரியாமல் திராவிடக் கொள்கையை பிடித்து விட்டோம். இப்போது எதிர்விளைவுகளை சந்திக்கின்றோம்.  என்ன விளைவுகள்... ?
த மிழனை தமிழன் ஆள முடியாது. பல நுõற்றாண்டுகளாக தமிழனை பிற இனத்தவர்தான் ஆளுவார்கள். தமிழ் மொழி பேசாத கன்னட மொழியை பேசும் பெரியாரை தந்தை என்று ஏற்றுக் கொண்டவர்கள்தானே முட்டாள் கூட்டம்தானே நாம்.